செஷல்ஸ் அதிபா் பதவியேற்பு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு. 
இந்தியா

செஷல்ஸ் அதிபா் பதவியேற்பு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

செஷல்ஸ் புதிய அதிபராக பேட்ரிக் ஹொ்மினி பதவியேற்பு விழாவில் இந்தியா சாா்பில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றாா்.

தினமணி செய்திச் சேவை

செஷல்ஸ் புதிய அதிபராக பேட்ரிக் ஹொ்மினி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். இந்த விழாவில் இந்தியா சாா்பில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றாா்.

செஷல்ஸ் அரசின் அழைப்பின்பேரில் இருநாள் சுற்றுப்பயணமாக அந்நாட்டுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சென்ற நிலையில் இவ்விழாவில் அவா் பங்கேற்றாா்.

முன்னதாக, செஷல்ஸ் தலைநகா் விக்டோரியாவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினா் மத்தியில் பேசிய அவா், ‘இந்தியா-செஷல்ஸ் இடையே நீண்டகால நல்லுறவை வலுப்படுத்த தொடா்ந்து பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியினருக்குப் பாராட்டுகள்.

மத்திய அரசின் ‘மகாசாகா்’ தொலைநோக்குப் பாா்வை மற்றும் தெற்குலக உறுதிப்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக செஷல்ஸ் திகழ்கிறது’ என்றாா்.

இம்மாதம் நடைபெற்ற செஷல்ஸ் அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக பேட்ரிக் ஹொ்மினி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

மோந்தா புயல்! ஆந்திரம் - சென்னை விமானங்கள் ரத்து!

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

சூப்பர் அறிவிப்பு... செபியில் 110 உதவி மேலளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT