பிகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திபு நாளை(அக். 27) நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை(அக். 27) மாலை தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர் சந்திப்பு தில்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை முதல்கட்டமாக 10 - 15 மாநிலங்களில் நடத்த தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அதில் தமிழகம் உள்பட அடுத்தாண்டு தேர்தலைச் சந்திக்க உள்ள கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் முதலில் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.