வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் செவ்வாய்க்கிழமை(அக். 28) ‘மோந்தா’ புயலாக உருவாகவிருப்பதால் ஒடிஸாவுக்கு மிக கனமழைப்பொழிவு இருக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதிலும், குறிப்பாக வங்கக்கரையோரம் உள்ள மாவட்டங்களில் எச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். கடலுக்குச் சென்ருள்ள மீனவர்கள் அனைவரும் கரை திரும்புவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் அக். 28-ஆம் தேதி தீவிர புயலாக (மோந்தா) வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் மோந்தா கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பர்க்கப்படும் அக். 28 மாலை அல்லது இரவில் மணிக்கு 90 - 100 கி.மீ. வேகத்தில்(அதிகபட்சம் மணிக்கு 110 கி.மீ. வேகம்) தரைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மல்காங்கிரி
கோரபுட்
ரயாகடா
கஜபதி
கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஏனைய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.