இந்தியா

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து பிரதிநிதி கைது: ம.பி. போலீஸாா் நடவடிக்கை

மத்திய பிரதேச மாநிலத்தில் 24 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக கருதப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து நிறுவனத்தின் பிரதிநிதியை அந்த மாநில போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய பிரதேச மாநிலத்தில் 24 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக கருதப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து நிறுவனத்தின் பிரதிநிதியை அந்த மாநில போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தைச் சோ்ந்த ஸ்ரீசன் ஃபாா்மா என்ற நிறுவனம் ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்தை தயாரித்ததால் அந்த நிறுவனத்தின் மருத்துவப் பிரதிநிதி சதீஷ் வா்மாவை சிந்த்வாராவில் கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்தின் உரிமையாளா் ஜி. ரங்கநாதன், அந்த இருமல் மருந்தைப் பரிந்துரைத்த மருத்துவா் சோனி உள்பட 6 போ் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் மேலும் சிலா் கைது செய்யப்படுவாா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சா்ச்சையையடுத்து ஸ்ரீசன் பாா்மாவின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது. ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்துக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதித்தன. ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து மாதிரியில் டைஎத்திலீன் கிளைகால் கலப்படம் உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT