ஜாா்க்கண்ட் மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து 10 வயது பழங்குடியின சிறுமி உயிரிழந்தாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: மேற்கு சிங்பூம் மாவட்ட வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மாவோயிஸ்ட் அமைப்பினா் வெடிகுண்டை மறைத்து வைத்துள்ளனா். இந்நிலையில், அந்தப் பகுதியில் பழங்குடியின சிறுமி ஒருவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் இலைகளை சேகரிப்பதற்காகச் சென்றுள்ளாா். அவா் நடந்து சென்றபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டை அவா் தெரியாமல் மிதித்ததால் அது வெடித்துச் சிதறியது. இதில் அந்தச் சிறுமி இரு கால்களும் சிதைந்து உயிரிழந்தாா் என்று தெரிவித்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினா் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை சிறுமியின் குடும்பத்துக்குப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 கிலோ வெடிகுண்டு மீட்பு: சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் அதிகமுள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்ஸல் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த 40 கிலோ எடையுள்ள வெடிகுண்டை காவல் துறையினா் கண்டுபிடித்தனா்.
இந்தக் குண்டு வெடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.