மத்திய சிறைகளில் ஆம் ஆத்மி மருத்துவமனைகளைத் தொடங்கும் என்று பஞ்சாப் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பல்பீர் சிங் அறிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ஆரோக்கியமான பஞ்சாபை உருவாக்குவதற்கும், மத்தியச் சிறைகளுக்குள் ஆம் ஆத்மி மருத்துவமனைகளை அமைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை அரசு தொடங்குகிறது. இதன்மூலம் கைதிகளுக்கு விரிவாக நல்வாழ்வை உறுதி செய்கிறது.
தனிநபர்களைச் சீர்திருத்துவதில் அரசு நம்பிக்கை கொண்டிருப்பதால், கைதிகளின் மன ஆரோக்கியத்தை ஆதரிக்க உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
தனிநபர்களை சீர்திருத்துவதில் உண்மையான நீதி உள்ளது என்று நம்புவதால், சிறைகளை நாங்கள் சீர்திருத்த இல்லங்களாகக் கருதுகிறோம். ஆகஸ்ட் 15 முதல் பஞ்சாப் முழுவதும் 4.20 கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆம் ஆத்மி மருத்துவமனைகள் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் கூறினார்.
பஞ்சாப் முழுவதும், 881 ஆம் ஆத்மி மருத்துவமனைகள் ஏற்கெனவே 4.20 கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளன, மேலும் ஆகஸ்ட் 15, 2022 முதல் 2.29 கோடி இலவச நோயறிதல் பரிசோதனைகளை நடத்தியுள்ளன என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: கால்நடைக் கண்காட்சி! ரூ. 15 கோடி குதிரை, ரூ. 25 கோடி எருமை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.