பிரதமர் நரேந்திர மோடியை கொலைகாரர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்று வரும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப் பேசுகையில், ``இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்யவிருக்கிறேன். பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உள்ளது. எங்களுக்குள் ஒரு நல்ல உறவும் உள்ளது.
அதேபோல, பாகிஸ்தான் பிரதமரும் ஒரு சிறந்த மனிதர். அவர் ஒரு சிறந்த போராளி. இருவருக்கிடையுமான போரில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இருவரையும் அழைத்து, அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது என்று கூறினேன். ஆனால், அவர்கள் இருவரும் போரை நிறுத்த முடியாது என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் வலிமையான மனிதர்கள். பிரதமர் மோடி சிறந்த மனிதர்.
அவரைப் போல தந்தையைப் பெற நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அவர் ஒரு கொலைகாரர்; நரகத்தைவிட மோசமானவர். நாங்கள் போரிடுவோம் என்றுதான் பிரதமர் மோடி கூறினார், நான் சொன்னேன் - அச்சோ, இவர்தான் எனக்குத் தெரிந்த அதே மனிதர்.
இருப்பினும், இரு நாள்களுக்குப் பிறகு அவர்கள் என்னை அழைத்ததுடன், போரையும் நிறுத்திக் கொண்டனர். அது எப்படி? ஆச்சரியமாக இல்லையா? பைடன் இதைச் செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆனால், எனக்கு அப்படி தோன்றவில்லை’’ என்று தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதனையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்ற இந்தியா, தாக்குதலை நிறுத்தியது.
இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாகக் கூறியதால்தான், போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இருப்பினும், டிரம்ப்பின் கூற்றை மத்திய அரசும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதையும் படிக்க: அமைதியை ஏற்படுத்துபவர்! டிரம்ப்புக்கு தங்க கிரீடம் பரிசளிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.