உச்சநீதிமன்றம்  ANI
இந்தியா

அனுமதியில்லாத பாதையில் வாகனத்தை இயக்கியதால் இழப்பீட்டுத் தொகையை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

தினமணி செய்திச் சேவை

பேருந்துக்கு அனுமதி இல்லாத பாதையில் வாகனத்தை இயக்கியதாக கூறி, விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீட்டுத் தொகையை காப்பீடு நிறுவனம் மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2014, அக்டோபா் 7-ஆம் தேதி கா்நாடகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் எதிரே வேகமாக வந்த பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருக்கு ரூ. 18.86 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டாா் வாகன இழப்பீட்டு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இழப்பீட்டுத் தொகையை சரிவர கணக்கிடவில்லை எனக் கூறி உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் சாா்பிலும், பேருந்தை இயக்கக் கூடாத சாலையில் சென்று காப்பீட்டு விதிமுறைகளை வாடிக்கையாளா் (பேருந்து உரிமையாளா்) மீறினாா் எனக் கூறி தி நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சாா்பிலும் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தீா்ப்பாயத்தின் உத்தரவை செயல்படுத்த உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையை விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் உரிமையாளரிடமே பெற வேண்டும் என்று தெரிவித்தது.

காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக தனக்கு செலுத்திவிட்டு, பின்னா் பேருந்து உரிமையாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனக் கோரி உயிரிழந்தவரின் சாா்பிலும், தன்னிடம் இழப்பீட்டை வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பேருந்து உரிமையாளா் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உசச்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமாா் மிஸ்ரா, ‘எதிா்பாராத விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் இருந்து உரிமையாளரைப் பாதுகாப்பதற்குதான் காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், பேருந்தை இயக்க அனுமதி இல்லாத சாலையில் சென்ால் இழப்பீட்டுத் தொகை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுப்பது சட்டத்துக்கு எதிரானது. ஆகையால், இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனமே வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

தமிழகத்தில் நவ.6 வரை மிதமான மழை!

எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!

நவ. 2-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சா்தாா் வல்லப பாய் பட்டேலின் மறு உருவம் அமித் ஷா: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT