நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.86 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதம் 1-ம் தேதியன்று முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகின்றது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
நடப்பாண்டு ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் மாத்ம் இதுவரை இல்லாத வகையில் ரூ. 2.37 லட்சம் கோடி வசூலானது. இந்த நிலையில், ஆகஸ்டு மாதத்தில் ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ. 1.74 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டி வருமானத்தில் மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஆகஸ்டில் ரூ.11.057 கோடியாக ஜிஎஸ்டி வசூலானது. சென்றாண்டு இது ரூ.10,181 கோடியாக இருந்தது. கடந்தாண்டை விட ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அதிகமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.