சீனாவில் மோடி - புதின் ஒரே காரில் பயணம் X / Modi
இந்தியா

சீனாவில் மோடி - புதின் ஒரே காரில் பயணம்!

சீனாவில் மோடி - புதின் ஒரே காரில் பயணித்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சீனாவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே காரில் பயணித்தனர்.

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதில், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று காலை உச்சி மாநாடு நடைபெற்ற அரங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமா் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடிய புகைப்படங்கள் வெளியாகின.

உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா - ரஷியா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் பயணித்த கூட்டம் நடைபெறும் அரங்குக்கு சென்றுள்ளனர்.

அந்த புகைப்படத்தை பகிர்ந்த பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு ஒரே காரில் செல்வதாகவும் புதினுடனான உரையாடல் ஆழமானவை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மோடியும், ஷி ஜின்பிங்கும் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பரஸ்பர நலன் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில், பெருமளவில் வா்த்தகம்-முதலீட்டு உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Russian President Vladimir Putin and Prime Minister Narendra Modi traveled in the same car in China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT