பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 300 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 5,500 மக்கள், ராணுவப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில், பெய்த கனமழையால் காகர் நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் தர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஷாகோட், ஃபில்லூர் மற்றும் தாதேவால் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும் இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, தற்போது வரை 50 ராணுவக் குழுக்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இதன்மூலம், தற்போது வரை பஞ்சாபில் இருந்து 300 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 5,500-க்கும் அதிகமான மக்களை ராணுவக் குழுக்கள் மீட்டுள்ளன.
மேலும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 3,000-க்கும் அதிகமானோருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் 27 டன் அளவிலான உணவுப் பொருட்களையும் ராணுவம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், வெள்ளத்தால் முடக்கப்பட்ட சம்ப் எனும் கிராமத்தில் தவித்த கர்ப்பிணி பெண்ணை ராணுவப் படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பஞ்சாப் வெள்ளத்தில் சுமார் 30 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை அம்மாநில அரசு பேரிடராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.