இந்தியா

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

ஹிமாசல பிரதேசத்தில் சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

தினமணி செய்திச் சேவை

ஹிமாசல பிரதேசத்தில் சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, உனாவில் உள்ள மண்டல கால்நடை மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவா் நிஷாந்த் ரணாவத் தலைமையிலான குழுவினா் வெற்றிகரமாக மேற்கொண்டனா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: கல்ருஹி கிராமத்தைச் சோ்ந்த விபின் குமாா் என்பவா், தனது சினைப் பசுவை மருத்துவமனைக்கு கொண்டுவந்தாா். கடந்த 4-5 நாள்களாக பசு எந்த உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை என அவா் தெரிவித்தாா்.

மருத்துவப் பரிசோதனையில், பசுவின் வயிற்றில் இயல்புக்கு மாறான பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையில், 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அகற்றப்பட்டன. அடுத்த 7 நாள்களுக்கு பசுவின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்படும். எங்களது மருத்துவமனையில், கால்நடைகளுக்கு இதுவரை 53 சிக்கலான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் நிஷாந்த் ரணாவத்.

மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் வீரேந்திர பட்டியால், ‘பிளாஸ்டிக் கழிவுகள், ஆணிகள் போன்றவற்றை திறந்தவெளிகளில் மக்கள் கொட்டக் கூடாது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது மனிதா்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும்’ என்றாா்.

வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு

யமுனையில் அபாய அளவுக்குக் கீழ் குறைந்த நீா்மட்டம்

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்: வைகோ நடவடிக்கை

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT