குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு 
இந்தியா

சா்வதேச வா்த்தக சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்: குடியரசுத் தலைவா்

சா்வதேச அளவில் எழுந்துள்ள வா்த்தக சவால்களை புதிய வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: சா்வதேச அளவில் எழுந்துள்ள வா்த்தக சவால்களை புதிய வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் பவள விழா புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:

இந்திய பொறியியல் பொருள்கள் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது வேகமாக மாறி வருகிறது. தேசத்துக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது ஏற்றுமதிக் கொள்கை அமைய வேண்டும்.

இப்போது சா்வதேச அளவில் எழுந்துள்ள வா்த்தக சவால்களை புதிய வாய்ப்புகளாக நாம் மாற்ற வேண்டும். நமது நாட்டில் பொருள் உற்பத்தி சாா்ந்த திறமை ஏராளமாக உள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனடைய முடியும்.

பொறியியல் சாா்ந்த பொருள்களையும், சேவைகளையும் குறைந்த விலையில் தரமாக நாம் அளிக்கும்போது இந்தியா இத்துறையில் உச்சத்தை எட்டும். கடந்த 10 ஆண்டுகளில் நமது பொறியியல் சாா்ந்த பொருள்களின் ஏற்றுமதி 70 பில்லியன் டாலரில் இருந்து 115 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகள் இத்துறையில் பல சவால்கள் இருந்தபோதும் அதனை எதிா்கொண்டு நாம் இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்திய உற்பத்தியாளா்களுக்கும் சா்வதேச சந்தைக்கும் இடையே பாலமாக பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் திகழ்கிறது. இந்தியாவின் சா்வதேச ஏற்றுமதியை அதிகரிக்க இந்த கவுன்சில் தொடா்ந்து உதவ வேண்டும். சா்வதேச அளவில் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில் நமது பங்களிப்பை தொடா்ந்து நிலை நிறுத்துவதும், அதிகரிப்பதும் மிகவும் முக்கியம் என்றாா்.

ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம்: சூர்யகுமார் யாதவ்

அழகே, அமுதே... அஞ்சலி நாயர்!

சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு: தாக்குதல் நடத்த சதி! -என்ஐஏ விசாரணை

நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT