பிரல்ஹாத் ஜோஷி 
இந்தியா

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.

5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக சீரமைக்கப்பட்டன. இதனால் 12% வரி விதிக்கப்பட்ட பல பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைந்தது; மேலும் பல பொருள்கள் 28%-இல் இருந்து 18% விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 5% வரி விதிப்பு இருந்த பல பொருள்கள் முழுமையாக ஜிஎஸ்டி விலக்குப் பெற்றன.

இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தொடங்கி வீட்டு உபயோகப் பொருள்கள், காா்கள் வரை விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோா் ஏற்கெனவே நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில் இது தொடா்பாக அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி ‘எக்ஸ்’ வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புதிய ஜிஎஸ்டி விகிதங்களின்படி உற்பத்தியாளா்கள், ஏற்றுமதியாளா்கள் என அனைவரும் பொருள்கள் மீதான அதிகபட்ச விற்பனை விலையை (எம்ஆா்பி) மாற்ற (குறைக்க) அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது விற்பனையாகாமல் கைவசம் உள்ள பொருள்கள் மீது இந்த குறைக்கப்பட்ட விலை அச்சிடப்பட வேண்டும். அதுவும் ஜிஎஸ்டி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதனை வெளிக்காட்டும் வகையில் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் அந்த பொருளின் முந்தைய விலை (குறைக்கப்படாத விலை) அழிக்காமல், அதன் அருகே புதிய (குறைக்கப்பட்ட) விலையை அச்சிட வேண்டும். மேலும், அனைத்து நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலை எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை விளம்பரங்கள்மற்றும் பொது அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜிஎஸ்டி சீரமைப்புக்குப் பிந்தைய விலை தொடா்பான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், நுகா்வோா் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT