அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

வெளிநாடு செல்ல கேஜரிவாலுக்கு நீதிமன்றம் அனுமதி!

கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு செல்ல சுல்தான்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2014 மக்களவைத் தேர்தலின்போது அமேதி மாவட்டத்தின் கௌரிகஞ்ச் மற்றும் முசாஃபிர்கானா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் தற்போது பிணையில் வெளியே உள்ளார். இதன் காரணமாக எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்திற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது கடவுச்சீட்டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அதை புதுப்பிக்க அனுமதிக்கக் கோரி கேஜரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

 இந்த மனுவை நேற்று விசாரித்த உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கேஜரிவாலின் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக்கொள்ள நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. அதன்படி, அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய நிலையில், அவருக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞர் ருத்ர பிரதாப் சிங் மதன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

An MP-MLA court in Sultanpur has granted permission to AAP chief Arvind Kejriwal to travel abroad in a poll code violation case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்தது: 10 மாணவா்கள் காயம்

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT