FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 96% வாக்குப்பதிவு!

புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

9 செப்டம்பர் 2025, 4:00 pm IST
சி.பி. ராதாகிருஷ்ணன், பி. சுதர்சன் ரெட்டி
பகிர்:

புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 96 சதவீத எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்.

குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், 15-வது குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் மோடி முதலாவதாக வாக்களித்தார். அதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் பிரதமரும், மாநிலங்களவையில் ஜேடி(எஸ்) எம்பியுமான எச்.டி. தேவகௌடா சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா உள்ளிட்டவர்களும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் தங்களின் வாக்கைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் மாலை 3 மணி நிலவரப்படி இதுவரை 96 சதவீத எம்பிக்கள் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments