எம்பி ரஷீத் X / ANI
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சிறையிலிருந்து வந்து வாக்களித்த எம்பி ரஷீத்!

சிறையிலிருந்து வந்து வாக்களித்த ஜம்மு - காஷ்மீர் எம்பி ரஷீத்.

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரமுல்லா எம்பி பொறியாளர் ரஷீத், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் காலை முதல் தங்களின் வாக்கைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியின் சுயேச்சை எம்பியான ரஷீத், பரோலில் நாடாளுமன்றத்துக்கு வந்து வாக்களித்துள்ளார்.

வாக்களிக்க வருகை தந்த ரஷீத்தை மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கட்டியணைத்து வரவேற்றார்.

தேர்தலில் வாக்களிக்க தில்லி உயர் நீதிமன்றம் ரஷீத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை நீதிமன்றத்தால் ரஷீத்துக்கு காவல் பரோல் வழங்கப்பட்டது.

பொறியாளரான ரஷீத், கடந்த மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vice Presidential Election: MP Engineer Rasheed casts his vote from prison

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் 91-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக 21 வயது வி.எஸ். ராகுல்!

இதய நோய், நீரிழிவு.. உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்!

வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா: பிரதமர் மோடி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் இன்று சுற்றுப்பயணம்!

நடந்தது என்ன? கௌரி கிஷன் பேட்டி!

SCROLL FOR NEXT