இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இஸ்ரேல் அரசின் வலது சாரி நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச், அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், இன்று (செப்.10) குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் அதிகாரிகள் குழுவுடன் வந்துள்ள ஸ்மோட்ரிச், பாரம்பரியம், கலாசாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா, குஜராத் மற்றும் இஸ்ரேல் இடையில் ஒற்றுமை உள்ளது எனவும் வருங்காலத்தில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் அதிகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு வர வேண்டும் என்பது தனது நீண்டகால விருப்பம் என அமைச்சர் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
மேலும், குஜராத்தின் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில், செயல்பாடுகளை அமைக்கும் இஸ்ரேலிய நிதி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் யூபிஐ அமைப்பு குறித்தும் அவர் பேசியுள்ளார்.
இத்துடன், இஸ்ரேல் அமைச்சருடன் வருகை தந்த குழுவை வரவேற்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா - இஸ்ரேல் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளது எனவும், அந்த உறவுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுறவுக் கொள்கைகளின் அடிப்படையில் உருவானவை எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விமர்சிக்கும் சாம்சங்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.