THE-CONJURING-LAST-RITES-1053628.JPG

 
Center-Center-Chennai
இந்தியா

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

திரையரங்கினுள் கான்ஜுரிங் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, சுவாரசியத்தை குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுரிங் - தி லாஸ்ட் ரைட்ஸ் படத்தைக் காண மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் சின்ச்வாட் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் சென்றார்.

இந்த நிலையில், அவர்களின் இருக்கைக்கு பின்னிருக்கையில் இருந்த ஒருவர், படத்தின் கதையையும் ஒவ்வொரு காட்சியையும் முன்கூட்டியே தனது மனைவியிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். இதனால், படத்தின் மீதான சுவாரசியம் குறைவதாக மென்பொருள் பொறியாளர் எச்சரித்தார்.

இருப்பினும், பின்னிருக்கையில் இருந்தவர் தொடர்ந்து கதையை சொல்லிக்கொண்டே இருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தின் இறுதியில், மென்பொருள் பொறியாளரை பின்னிருக்கையில் இருந்தவரும் அவரது மனைவியும் தாக்கினார். தடுக்கச் சென்ற மென்பொருள் பொறியாளரின் மனைவியையும் தாக்கினார்.

இதனையடுத்து, தாக்குதல் நடத்திய இருவர் மீதும் மென்பொருள் பொறியாளர் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Pune Techie, Wife Assaulted At INOX Chinchwad After Dispute Over Movie Spoilers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரஞ்சு நிலவு... ஸ்ரீலீலா!

ஆசிய கோப்பை: பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தியா!

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

SCROLL FOR NEXT