முகப்பு
தமிழ்நாடு

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தமிழக வெற்றிக் கழகததின் தலைவர் விஜய் கூறிய குட்டிக் கதையை நடிகை ஜூலி விமர்சித்துள்ளது குறித்து...

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:08 PM
வேலூர் பிரசாரத்தில் விஜய் / நடிகை ஜூலி - படம் - எக்ஸ்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:04 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறிய குட்டிக் கதையை நடிகை ஜூலி விமர்சித்துள்ளார்.

கேள்வி கேட்பது எதிர்ப்பு இல்லை ஜனநாயக உரிமை. பிரபலமாக இருப்பது ஒரு விஷயம். வழிநடத்துவது வேறொரு பொறுப்பு எனக் குறிப்பிட்டு விடியோ ஒன்றை ஜூலி பகிர்ந்துள்ளார்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:04 PM

விடியோவில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

Advertisement

''நான் ஜூலி. இப்போதுதான் உங்கள் வேலூர் பிரசாரத்தை பார்த்தேன். வழக்கம்போல அதில் ஒன்றும் இல்லை. கூட்டத்தில் ஒரு குட்டிக் கதை கூறியிருந்தீர்கள். அதைக் கேட்டு என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.

நீங்கள் போகிற போக்கில் ஜல்லிக்கட்டு காளை நின்றது. அதற்கு புல்லுக்கட்டு காட்டியதும், ஓரம் சென்று நின்றது எனக் கூறிவிட்டுச் சென்றுவிடுவீர்கள்.

உங்கள் கட்சியில் இருக்கும் பாதி பேர் மைனர். அவர்கள் ஜல்லிக்கட்டு காளையிடம் சென்று புல்லுக்கட்டி காட்டும்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆவது. 50 என்பது 50 ஆகவே இருக்கட்டும். 500 ஆக்கிவிடாதீர்கள்.

எல்லோரும் போராடி ஜல்லிக்கட்டு அனுமதி வாங்கி வைத்திருக்கிறோம். உங்கள் ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளையிடம் சென்று புல்லுக்கட்டு காட்டும்போது ஏதாவது ஆகிவிட்டால், திரும்பவும் போராட யாருக்கும் திராணியில்லை'' எனக் குறிப்பிட்டார்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:04 PM

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வரும் நிலையில், குட்டிக் கதைக்கும் நடைமுறை உண்மைக்கும் வித்தியாசம் தெரியாதா? என தவெக தொண்டர்கள் பலர் ஜூலியை விமர்சித்து வருகின்றனர்.

summary

Actress Julie criticizes Vijay's Jallikattu story

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.