அஸ்வினி வைஷ்ணவ் 
இந்தியா

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்) பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தலைநகா் ஐஸாலுக்கு பிரதமா் மோடி நேரில் வருகை தந்தபோதிலும், மோசமான வானிலை காரணமாக விழா நடைபெற்ற இடத்துக்கு அவரால் வர முடியவில்லை.

இவ்விழாவில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: பிரதமா் மோடியின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையின் பலனே வடகிழக்கின் வளா்ச்சியாகும். 2014-க்கு முன்பு வடகிழக்கு பிராந்திய ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,000 கோடியே ஒதுக்கப்பட்டது.

இதை ரூ.10,000 கோடியாக அதிகரித்தவா் பிரதமா் மோடி. வடகிழக்கில் இப்போது ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மிஸோரம் தலைநகா் ஐஸால், முதல் முறையாக ரயில் இணைப்பை பெற்றுள்ளது. உயரமான மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகளின் ஊடாக இந்த வழித்தடம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இது, மிஸோரமின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கும் அனுபவத்தை வழங்கும். குவாஹாட்டி, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட பெருநகரங்களுடன் ரயில் இணைப்பை உறுதி செய்வதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்றாா் அவா்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT