ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%,18% ஆகிய இரு விகிதங்களாகக் குறைக்கவும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இரு விகித ஜிஎஸ்டி முறை வரும் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், ஆந்திரம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த விளக்கம் மற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 28 சதவீதத்தில் இருந்த 90 சதவீத பொருள்கள் 18 சதவீதத்துக்கு வந்துள்ளது. இதன் பலன்கள் அமலுக்கு வருவதற்கு முன்னரே, அதனை ஏராளமான நிறுவனங்கள் மக்களுக்கு வழங்க துவங்கிவிட்டன.
தற்போதுள்ள 2 வரி அடுக்குகள் காரணமாக இந்திய பொருளாதாரத்திற்குள் ரூ. 2 லட்சம் கோடி செலுத்தப்படும். இதனால் மக்கள் கையில் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்.
2018ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய் 2025ல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 62 லட்சத்திலிருந்து 1.51 கோடியாக அதிகரித்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.