பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை மணல் சிற்பமாக வரைந்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பட்நாயகின் எக்ஸ் பதிவில்..
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி ஒடிசாவின் புரி கடற்கரையில் பாரத் கி உதான் மோடி ஜி கே சாத் என்ற செய்தியுடன் 750 தாமரை மலர்களைக் கொண்ட எனது மணல் சிற்பம் என்று பதிவிட்டுள்ளார்.
பட்நாயகின் மற்றொரு பதிவில்,
பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் அயராத அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. ஜெகந்நாதர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நாட்டிற்குப் பல ஆண்டுகள் சேவை செய்ய ஆசிர்வாதத்தையும் அளிக்கட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த மணற்சிற்பத்தைப் புரி கடற்கரையில் பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
தனது மணல் சிற்பங்களுக்காக சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சுதர்சன் பட்நாயக், தேசிய மற்றும் உலகளாவிய நிகழ்வுகளைக் குறிக்க தனது கலையை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.