மும்பையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக கூடியிருந்த இளைஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 17 மாடலை இன்று அறிமுகப்படுதியுள்ளது. எந்தவொரு ஆப்பிள் ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில் மிகக்குறைந்த தடிமனில் (5.6 மி.மீ) இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சாங்சங் கேலக்ஸி எட்ஜ் எஸ் 25 ஸ்மார்ட்போனைவிட (5.8 மி.மீ) இது குறைவாகும். இந்நிலையில் தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஆப்பிள் ஸ்டார்களில் நேற்று நள்ளிரவு முதலே இளைஞர்கள் காத்திருந்தனர்.
ஆப்பிள் ஐபோன் 17 அறிமுகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள்!
இன்று(செப்டம்பர் 19) ஐபோன் 17 அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
இந்த ஐபோனுக்காக இளைஞர்கள் சண்டையிட்டும் கொண்டனர். மும்பையின் பி.கே.சி ஜியோ சென்டரில் உள்ள ஆப்பிள் ஸ்டோரின் வெளியே ஐபோன் 17 வாங்குவதற்காக காத்திருந்த இளைஞர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் தலையிட்டு அவர்களை சண்டையிலிருந்து விலக்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.