கோப்புப்படம்.  
இந்தியா

கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலி

கேரளத்தில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.

கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள குன்னத்துகலில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது சனிக்கிழமை விழுந்தது.

இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.

பலியானவர்கள் வசந்தா (65) மற்றும் சந்திரிகா (64) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி கூலி வேலை செய்பவர்கள்.

கிராமத்தில் வேலை நேரத்தில் மதிய உணவுக்குப் பிறகு பெண்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்வு?

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், வேரோடு சாய்ந்த மரம் திடீரென அவர்கள் மீது விழுந்தது. காயங்களுடன் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவித்தனர்.

Two women workers were killed after an uprooted coconut tree fell on them at Kunnathukal in nearby Neyyattinkara on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபஞ்ச அதிசயமே... ஸ்ரீலீலா!

ஜிஎஸ்டி எதிரொலி: பால் உள்ளிட்ட பொருட்களின் விலையை குறைத்த அமுல் நிர்வாகம்!

ஏன் சனிக்கிழமையில் பிரச்சாரம் - விஜய் விளக்கம் | TVK Vijay speech

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன்: ஷ்ரேயா கோஷால் உருக்கமான பதிவு!

வெளிநாட்டு முதலீடா.?வெளிநாட்டில் முதலீடா..? - விஜய் | TVK Vijay speech

SCROLL FOR NEXT