பிரதமர் மோடி (கோப்புப்படம்) 
இந்தியா

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை!

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று(செப். 21) மாலை 5 மணிக்கு உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.88 லட்சமாக உயர்த்தும் கோப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்ட நிலையில், இது குறித்தும் பிரதமர் மோடி பேசயிருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதன் காரணமாக, சப்பாத்தி, பரோட்டா, கூந்தல் எண்ணெய், ஐஸ்கிரீம், தொலைக்காட்சிப் பெட்டிகளின் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு பொருள்களின் விலை வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கும் வகையில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) தீபாவளி பண்டிகைக்குகள் மேற்கொள்ளப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி தெரிவித்தார்.

அதன்படி, நான்கு விகித ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவது, புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிப்பது தொடர்பான முன்மொழிவை மாநில நிதியமைச்சர்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) நிதியமைச்சகம் வழங்கியது. இந்த முன்மொழிவுக்கு கடந்த ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது ஜிஓஎம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

According to reports, Prime Minister Narendra Modi will address the nation today (Sept. 21) at 5 pm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கயல்விழி வலையில்... ஸ்வேதா டோரத்தி!

“விஜய் பரிட்சை எழுதி Pass ஆகட்டும்! அதன் பிறகு பார்க்கலாம்!” ஆர்.பி. உதயகுமார் பேட்டி

அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை!

கடல் தாண்டும் பறவை... தாரணி!

மங்கள முகம்... ஜாஸ்மின் ராத்!

SCROLL FOR NEXT