ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டதாக அந்த மாநில பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி விடியோ காட்சிகள் அந்த மாநிலத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலின் உண்டியல் பணம் ரூ.100 கோடிக்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பதி கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு நிர்வகித்துவரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினரான பானு பிரகாஷ் ரெட்டி, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி கோயிலின் உண்டியல் பணம் எண்ணும் இடமான பரகாமணியில் கோயில் ஊழியர் ரவிக்குமார் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த போது உண்டியல் பணத்தைத் திருடியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி விடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வீடு, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ரெட்டி, 2019 முதல் 2024 வரை நடந்த ஒய்எஸ்ஆர் ஆட்சியில் நடந்த "மிகப்பெரிய கொள்ளை" திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை என்று அவர் கூறினார்.
இந்த கொள்ளை தொடர்பான சிசிடிவி விடியோ காட்சிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள சிசிடிவி விடியோ காட்சிகள், அந்த மாநிலத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தவர், இதில் ஏராளமான குற்றவாளிகள் சிக்குவார்கள். ஆனால், ரவிக்குமாரின் உயிருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், இந்த வழக்கு ஏற்கனவே லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டதாகவும், பல ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் ரெட்டி குற்றம்சாட்டினார்.
திருப்பதி கோயிலின் செல்வத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி பணியாற்றியதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் பகிர்ந்து கொண்டதாகவும், ஒரு பங்கு ஜெகன் மோகன் ரெட்டியின் தாதேபள்ளி அரண்மனைக்கு திருப்பி விடப்பட்டதாகவும், கொள்ளைக்குப் பிறகு முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக ரெட்டி குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.