உத்தரப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் துரோகத்திலும் கொடூரமான கொலையிலும் முடிந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம், அகன்ஷா இருவருக்கும் இடையே இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அதுவே காதலாக மாறி அவர்கள் ஹனுமந்த் விஹாரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து லிவ்-இன் உறவில் வசித்து வந்துள்ளனர்.
ஆனால், அகன்ஷா வேறொரு ஆணுடன் பேசுவதை அறிந்ததும் இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த , ஜூலை 21ஆம் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அகன்ஷாவின் தலையை சுவற்றில் மோதியும் கழுத்தை நெரித்தும் சூரஜ் அவரை கொன்றுள்ளார். பின்னர் கொலையை மறைக்க சூரஜ் தனது நண்பர் ஆஷிஷ் குமாரின் உதவியை நாடியிருக்கிறார்.
அகன்ஷாவின் உடலை இருவரும் சேர்ந்து பையில் அடைத்து அதனை அப்புறப்படுத்த 100 கி.மீ தொலைவில் உள்ள பண்டாவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பையை யமுனை நதியில் வீச திட்டமிட்ட சூரஜ், அதற்கு முன்பாக பையுடன் செல்ஃபி எடுத்து அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ஸாகவும் வைத்திருக்கிறார்.
இதனிடையே ஆகஸ்ட் 8 ஆம் தேதி அந்த இளம் பெண்ணின் தாய் தனது மகள் காணாமல் போனதாகவும் அவரை சூரஜ் கடத்திவிட்டதாகவும போலீஸில் புகார் அளித்தார். இந்த நிலையில் இதுதொடர்பாக சூரஜ் உத்தமும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீஸார் விசாரித்தபோது இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் துரோகத்திலும் கொடூரமான கொலையிலும் முடிந்திருப்பது உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.