அமித் ஷா கோப்புப் படம்
இந்தியா

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: அமித் ஷா

நாடு முழுவதும் புதிய வரி அமைப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் மக்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும்..

இணையதளச் செய்திப் பிரிவு

நாடு முழுவதும் புதிய வரி அமைப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டின் சான்றாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அமித் ஷா வெளியிட்ட பதிவில்,

புதிய வரி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் வேகமாக நகர்த்தும், வளமான நாடாக மாற்றும். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்குச் சேவை செய்யப் பிரதமர் மோடியின் உறுதியான உறுதிப்பாட்டின் சான்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

மோடி அரசு நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் அவர்களின் சேமிப்பு தொடர்ந்து உயரும். அன்றாட அத்தியாவசியப் பொருள்கள், சுகாதாரப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், கல்விப் பொருள்களின் ஜிஎஸ்டி விகிதங்களில் ஏற்பட்டுள்ள குறைப்பு, அவர்களின் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கும், அதிகமாகச் சேமிக்க ஊக்குவிக்கும்.

நவராத்திரியின் புனித நாளில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளுக்கு மோடி அரசின் பரிசு. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதி இன்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 390க்கும் மேற்பட்ட பொருள்களின் வரிகளில் குறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.

உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், ஆட்டோமொபைல்கள், விவசாயம், பொம்மைகள், விளையாட்டு மற்றும் கைவினைப்பொருள்கள், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், காப்பீடு போன்ற துறைகளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மாற்றமடைகின்றது.

ஜிஎஸ்டியில் முன்னெப்போதும் இல்லாத நிவாரணம் மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் அவர்களின் சேமிப்பையும் அதிகரிக்கும். பல்வேறு பால் பொருள்களுக்கு ஜிஎஸ்டி பூஜ்ஜியமாகிறது. சோப்பு, பற்பசை, முடிக்குப் பயன்படுத்து எண்ணெய், ஷாம்பு போன்ற அன்றாடப் பொருள்களில் முன்னெப்போதும் இல்லாத குறைப்புகளை ஏற்படுத்தும். ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, மூத்த குடிமக்கள் பாலிசி, 33 உயிர்காக்கும் மருந்துகள், நோயறிதல் கருவிகள், ஆக்ஸிஜன், அறுவைச் சிகிச்சை கருவிகள், மருத்துவம், பல் மற்றும் கால்நடை சாதனங்கள் மீதான குறைந்தபட்ச ஜிஎஸ்டி வரை, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டு மக்களின் சேமிப்பில் வரலாற்று வளர்ச்சியைக் கொண்டுவரும்.

விவசாய உபகரணங்கள் மற்றும் உரத் துறை மீதான ஜிஎஸ்டி குறைப்பால் விவசாயிகள் உற்சாகமாக உள்ளனர். மேலும் வாகனங்களின் விலையைப் பற்றியும் மக்கள் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்று அமித் ஷா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை!

திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு துவக்கம்!

அண்ணாமலை - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

எச்1பி சர்ச்சைக்கு இடையே சீனாவின் கே விசா அறிமுகம்! இளைஞர்களை ஈர்க்கும் சிறப்பம்சங்கள்!

ஒரு நாயகன், இரு மனைவி... திருமாங்கல்யம் தொடரின் புதிய முன்னோட்ட விடியோ!

SCROLL FOR NEXT