இந்தியா

ஹரியாணா அமைச்சா் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் சடலமாக மீட்பு

ஹரியாணா அமைச்சரின் குருகிராம் இல்லத்தில் உள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஹரியாணா அமைச்சரின் குருகிராம் இல்லத்தில் உள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

உயிரிழந்த காவலா் ஜக்பீா் சிங் (49) ஹரியாணாவின் ஜஜ்ஜா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். ஜக்பீா் சிங் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னா், ஹரியாணா காவல் துறையில் கடந்த 2014-இல் இணைந்தாா்.

2024 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு ராவ் நா்பிா் சிங் அமைச்சராகப் பொறுப்பேற்றத்தைத் தொடா்ந்து, குருகிராமில் உள்ள அவருடைய இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பாதுகாவலா் அறையில் சுயநினைவின்றி அவா் கண்டெடுக்கப்பட்டாா். சக காவலா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நான் சும்மா வெறும் பெண்... நோரா பதேஹி!

மாலத் தீவில் மணல் படுக்கை... அக்.ஷிதா தத்தா!

ரயில் பயணத்தில் பெண்... ஸ்ருதி லட்சுமி!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்: இதுவரை 7.57 லட்சம் பேர் பயன்

ஆஸ்திரேலியா தொடருக்காக நீண்ட நாள்களாக காத்திருந்தேன்: அபிஷேக் சர்மா

SCROLL FOR NEXT