பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சீனா சென்றுள்ளனர்.. படம் - எக்ஸ்/CPIM Tamilnadu
இந்தியா

சீனா சென்ற மார்க்சிஸ்ட் கட்சிக் குழு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சீனா சென்றுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின், பன்னாட்டுத் துறை விடுத்த அழைப்பை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையிலான குழுவினர், நேற்று (செப். 22) இரவு தில்லி விமான நிலையத்தில் இருந்து சீனா புறப்பட்டுச் சென்றனர்.

இதுபற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் செப். 30 ஆம் தேதி வரையிலான 7 நாள் பயணத்தில், இந்தக் குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்தக் குழுவில் முக்கிய உறுப்பினர்கள் முஹம்மது சலீம், ஜித்தேந்திரா சௌத்ரி, ஆர். அருண் குமார், மத்திய குழு உறுப்பினர்கள் கே. ஹேமலதா மற்றும் சி.எஸ். சுஜாதா உள்ளிட்ட 6 பேர் சீனா தலைநகர் பெய்ஜிங் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: வாக்குத் திருட்டு நடைபெறும் வரை வேலையின்மை, ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும்: ராகுல்

A delegation from the Communist Party of India (Marxist) has visited China at the invitation of the Chinese Communist Party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீச்சல் உடையில் சாய் பல்லவி! வைரலான புகைப்படங்கள்! வாழ்த்தும் வசவும்!

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!

பெண்கள் இரவில் தனித்துப் பயணமா? கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை என்ன?

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

ஹாட்ரிக் தங்கப் பந்து விருது வென்ற பொன்மட்டி..! முதல் வீராங்கனையாக சாதனை!

SCROLL FOR NEXT