இந்தியா

சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபா் கைது

ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட கியாம் (எ) ஃபாஹிம் (19) மங்கோல்புரியைச் சோ்ந்தவா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கோஹத் என்கிளேவ் மெட்ரோ நிலையம் அருகே உள்ள நகைக் கடைக்குள் கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், விற்பனையாளரைக் கத்தியால் குத்தி கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்து சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடா்புடைய ஜிதேந்தா், விஜய் குமாா், விஷால் சைன், சிவம் ஆகியோா் கைதுசெய்யப்பட்ட நிலையில், விற்பனையாளரைக் கத்தியால் குத்திய கியாம் தலைமறைவானாா்.

இந்நிலையில், கியாமை குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

தில்லியில் நச்சு புகை: மிகவும் மோசம் பிரிவில் நீடிக்கும் காற்று மாசு!

வகுப்பறையை புரட்டிப்போட்ட யானை! மாணவர்கள் அதிர்ச்சி! | Coimbatore | Elephant | Shorts

பிகாரில் தேஜ கூட்டணி முன்னிலை: இபிஎஸ் வாழ்த்து

விண்ணப்பித்துவிட்டீர்களா..?ரூ.71,900 சம்பளத்தில் சுகாதார ஆய்வாளர் பணி!

உயர்ந்த ஆன்மா... தேவயானி மண்டல்!

SCROLL FOR NEXT