அரவிந்த் கேஜரிவாலுக்குப் பொருத்தமான தங்குமிடம் பத்து நாள்களுக்குள் ஒதுக்கப்படும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லியில் வீடு ஒதுக்கக் கோரிய மனுவுக்கு, மத்திய அரசு பதிலளிக்கத் தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் இன்று விசாரித்தது.
அரவிந்த் கேஜரிவாலுக்கு தங்குமிடம் ஒதுக்கீடு தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நீதிபதி சச்சின் தத்தா முன் சமர்ப்பிப்புகள் அளிக்கப்பட்டன.
பின்னர், ஆம் ஆத்மி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகுல் மெஹ்ரா, கடந்த காலங்களில் கேஜரிவாலுக்கு வழங்கப்பட்ட தங்குமிடத்திலிருந்து தரம் குறைந்ததாக இருக்கக் கூடாது என்று வாதிட்டார்.
ஒதுக்கப்பட்ட தங்குமிடத்தில் திருப்தி அடையவில்லை என்றால், ஆம் ஆத்மி கட்சி மற்றும் கேஜரிவாலும் அரசை அணுக சுதந்திரம் உண்டு என்று நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து பத்து நாள்களுக்குள் கேஜரிவாலுக்கு பொருத்தமான தங்குமிடம் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு, அக்டோபர் 4, 2024 அன்று கேஜரிவால் ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தைக் காலி செய்தார்.
அப்போதிலிருந்து, அவர் மண்டி ஹவுஸுக்கு அருகிலுள்ள மற்றொரு கட்சி உறுப்பினரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரணத்தில் மர்மம்: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.