கேரள முதல்வர் பினராயி விஜயன் கோப்புப் படம்
இந்தியா

ஆளுநர் என்பவர் முதலாளி அல்ல! கேரளத்தில் ஆளுநரை வம்பிழுக்கும் மாநில அரசு?

கேரள மாநில பாடத்திட்டத்தில் ஆளுநரை தேர்ந்தெடுக்கப்படாத வெறும் பெயரிலளவிலான நபர் என்று குறிப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள மாநில பாடத்திட்டத்தில் ஆளுநரை தேர்ந்தெடுக்கப்படாத வெறும் பெயரிலளவிலான நபர் என்ற குறிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவிவரும் நிலையில், பாடத்திட்டத்தில் ஆளுநர் குறித்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ஆளுநரை, `தேர்ந்தெடுக்கப்படாத வெறும் பெயரளவிலான நபர்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அம்மாநில ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே பொதுவாக மோதல் இருந்து வருகிறது. தமிழகம் உள்பட கேரளத்திலும் இந்த மோதல் இருந்து வருகிறது.

கேரளத்தில் ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் இருந்தபோதிலும் சரி; தற்போது ஆளுநராக பதவி வகிக்கும் ராஜேந்திர அர்லேகருக்கும் சரி - அம்மாநில அரசுடன் தொடர் மோதல் இருந்து வருகிறது.

கேரளத்தில் கல்வி அமைச்சராக வி. சிவன்குட்டி இருந்துவரும் நிலையில், ஜனநாயகம்: ஓர் இந்தியரின் அனுபவம் என்ற தலைப்பில் அமைந்துள்ள பாடத்தில், ஆளுநரைக் குறிப்பிட்டு அவரின் அதிகாரங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.

அதில், தேர்ந்தெடுக்கப்படாத, ஆனால் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர், ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆளுநர் என்பவர் முதலாளி அல்ல; பெயரளவிலான தலைவர் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: மருத்துவர், ஐஏஎஸ், பேரிடர் கால நிர்வாகி பீலா வெங்கடேசன்!

'Governor A Nominal Figure, Not Boss': Kerala Govt's Textbook Reply Amid Power Tensions With Raj Bhavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

அரசு சலுகைகளை பயன்படுத்தி பொறியியல் படித்தவன்! - இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து

22 ஆண்டுகளுக்குப் பிறகு மெரியம் - வெப்ஸ்டர் டிக்‌ஷனரி! 5,000 புதிய சொற்கள்!

2026 தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 25.9.25

ஆயுதபூஜை தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை!

SCROLL FOR NEXT