மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம், மங்களூருவில் ரகசிய தகவலின் பேரில் ஷீதல் அழகூர் தலைமையிலான மங்களூர் தெற்கு காவல் துறை குழு அட்டாவரில் உள்ள கப்ரிகுட்டே மசூதிக்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை மாலை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 12.26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட கஞ்சா ஒடிசாவில் இருந்து வரவழைக்கப்பட்டு ஏழு பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்தது. மேலும், ரூ.2,000 மதிப்பிலான எடை எந்திரங்கள் மற்றும் ரூ.1.05 லட்சம் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.3.52 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கேரளத்தைச் சேர்ந்த 11 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காண தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் மேலும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.