கோப்புப் படம் 
இந்தியா

ஹைதராபாதில் வெள்ளம்! 1000 பேர் வெளியேற்றம்!

ஹைதராபாதில் பெய்து வரும் கனமழையால் 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் முசி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹைதராபாதின் தாழ்வானப் பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், தெலங்கானாவின் பிரதான பேருந்து நிறுத்தங்களில் ஒன்றான, ஹைதராபாதில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து முனையத்தினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அங்கிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, முசி நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் படை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, பருவமழை தொடங்கியது முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

Over 1,000 people have been sheltered in relief camps due to heavy rains in Hyderabad, Telangana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை வீரர்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

தாயின் கண்முன்னே 5 வயது மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!

மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முழுமையாக திறக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்

SCROLL FOR NEXT