ஓடிசாவின் ஜர்சுகுடாவில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ. 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் எட்டு ஐஐடிக்களின் விரிவாக்கத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய மாணவர்கள் படிப்பதற்கான திறன் கொண்டதாக இது அமைய உள்ளது.
பிஎஸஎன்எல்லின் சுதேசி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட 97,500-க்கும் மேற்பட்ட 4ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களை அவர் தொடங்கிவைத்தார். மேலும் சம்பல்பூர் நகரில் ரூ. 273 கோடி செலவில் கட்டப்பட்ட 5 கி.மீ மேம்பாலத்தையும் அவர் திறந்துவைத்தார்.
ஜூன் 2024இல் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 15 மாதங்களில் பிரதமர் ஒடிசாவிற்கு வருகை தருவது இது ஆறாவது முறையாகும். ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடி ஜார்சுகுடா வருகை தருகிறார்.
முன்னதாக, ஒடிசாவின் இரண்டாவது வணிக விமான நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக அவர் செப்டம்பர் 22, 2018 அன்று ஜார்சுகுடா நகரத்திற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.