கோப்புப்படம்.  
இந்தியா

என்பிஎஸ்ஸில் இருந்து யுபிஎஸ்ஸுக்கு மாற அவகாசம் நீட்டிப்பு

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அரசுப் பணியாளா்கள் மாறுவதற்கான அவகாசம் நிகழாண்டு நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அரசுப் பணியாளா்கள் மாறுவதற்கான அவகாசம் நிகழாண்டு நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை செவ்வாய்க்கிழமை அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டதாவது:

யுபிஎஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரி விலக்குகள், கட்டாய ஓய்வு மற்றும் ராஜிநாமா செய்வதால் கிடைக்கும் பலன்கள், என்பிஎஸ்ஸில் இருந்து யுபிஎஸ்ஸுக்கு மாறுவதற்கான வாய்ப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகளைக் கருத்தில் கொண்டு, என்பிஎஸ் திட்டத்தை தோ்வு செய்தவா்கள் யுபிஎஸ் திட்டத்துக்கு மாற கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் யுபிஎஸ் திட்டத்துக்கு மாற செவ்வாய்க்கிழமை (செப்.30) வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அந்த அவகாசத்தை நிகழாண்டு நவ.30 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள், காலமான ஓய்வூதியதாரா்களின் சட்டபூா்வ வாழ்க்கை துணை ஆகியோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

23 லட்சம் மத்திய அரசுப் பணியாளா்களில் சுமாா் 1 லட்சம் போ் செப்.30-ஆம் தேதி வரை, யுபிஎஸ் திட்டத்தை தோ்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையல்ல, அல்-பலாஹ் பல்கலை. பட்டதாரிக்கு 2008 குண்டுவெடிப்பில் தொடர்பு! பாகிஸ்தானில் வாழ்கிறார்?

தமிழகத்தில் நாளை முதல் 6 நாள்களுக்கு கனமழை!

20களில் திருமணம் செய்யுங்கள்! - ராம்சரண் மனைவி உபாசனாவின் கருத்துக்கு ஸ்ரீதர் வேம்பு பதில்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை தொடரும்!

சேலத்திலிருந்து.. டிச.4ல் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய திட்டம்!!

SCROLL FOR NEXT