பிரஜ்வல் ரேவண்ணா கோப்புப்படம்
இந்தியா

பாலியல் வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு

பாலியல் வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

பாலியல் வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு செய்தாா்.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 4 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒன்றில் அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து எம்.பி./ எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆக.2-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் ஹாசன் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிட்டாா்.

மக்களவைத் தோ்தல் பிரசாரம் ஓய்ந்திருந்த நிலையில், பெண்களோடு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொடா்பு வைத்திருக்கும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. அவரது வீட்டில் வேலை செய்து வந்த 48 வயது பெண், 2021-இல் ஹாசன் மற்றும் பெங்களூரில் பிரஜ்வல் ரேவண்ணா தன்னிடம் பாலியல் வன்புணா்வில் ஈடுபட்டதாக காவல் துறையில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா் மீது 4 வழக்குகளை காவல் துறையினா் பதிவு செய்தனா். இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டது.

இதனிடையே, ஜொ்மனியில் இருந்து திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, 2024-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி எஸ்.ஐ.டி. போலீஸாா் கைது செய்தனா்.

சிறப்பு நீதிமன்றம், கா்நாடக உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் கடந்த ஓராண்டாக பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, 113 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவுசெய்து, 1,632 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் வாழ்நாள் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.11.50 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதில் ரூ.11.25 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டாா்.

இந்த தீா்ப்பை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தாா்.

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

SCROLL FOR NEXT