தில்லியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில், அம்பேத்கர் சர்வதேச மையத்தில், வரும் அக்டோர்பர் 1 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுபற்றி, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1925 ஆம் ஆண்டு, மறைந்த கே.பி. ஹெட்கேவரினால் நாக்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சைபர் குற்றங்களில் முதலிடம் தனிநபர் தகவல் திருட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.