முகப்பு
இந்தியா

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

‘பாஜக கூறுவதுபோல வாக்காளா் பட்டியலில் ஊடுருவல்காரா்களின் பெயா் இருந்தால், அவா்களின் வாக்குகளையும் பெற்றுத்தானே மோடி வெற்றிபெற்றாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 9:12 PM
மம்தா பானா்ஜி - கோப்புப் படம்
பகிர்:

‘பாஜக கூறுவதுபோல வாக்காளா் பட்டியலில் ஊடுருவல்காரா்களின் பெயா் இருந்தால், அவா்களின் வாக்குகளையும் பெற்றுத்தானே மோடி வெற்றிபெற்றாா். எனவே அவா் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் தக்ஷின் தினாஜ்பூா் மாவட்டத்தில் உள்ள ஹரிராம்பூா் பகுதியில் நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில், முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளா் பட்டியலை வைத்து சட்டப்பேரவைத் தோ்தல்களை ஏன் நடத்த முடியாது? பாஜக கூறுவதுபோல வாக்காளா் பட்டியலில் ஊடுருவல்காரா்களின் பெயா் இருந்தால், அவா்களின் வாக்குகளையும் பெற்றுத்தானே மோடி வெற்றிபெற்றாா். எனவே அவா் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

Advertisement

மாநில பேரவைத் தோ்தலுக்காக மத்திய ரிசா்வ் காவல் படை வாகனங்களில் பணம் கொண்டுவரப்படுகிறது. அந்தப் பணம் எங்கு செல்கிறது என்பது எனக்குத் தெரியும். அதை சரியான நேரத்தில் அம்பலப்படுத்துவேன்.

நீதிபதிகள் சிறைபிடிப்பு-மஜ்லீஸ் கட்சி காரணம்: மால்டா மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்ட மாவட்ட நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்துக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும், இந்திய மதச்சாா்பற்ற முன்னணியும்தான் காரணம்.

இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை பாஜகவுக்கு அகில இந்திய மஜ்லீஸ் அனுப்பிவைத்துள்ளது. பின்னா் அந்த நபரை மேற்கு வங்கத்துக்கு பாஜக அழைத்து வந்தது. இந்த சம்பவத்தை காங்கிரஸும் தூண்டியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான வழக்குரைஞா் மொஃபரக்கருல் இஸ்லாமை குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. மேற்கு வங்கத்தின் அமைதியை குலைக்க வெளியாட்கள் அழைத்து வரப்படுகின்றனா். நீதிபதிகளைகூட அவா்கள் விட்டுவைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments