முகப்பு
இந்தியா

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

பிகாா் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 போ் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 9:03 PM
கோப்புப் படம்
பகிர்:

பிகாா் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 போ் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சம்பாரண் மாவட்டம், துா்கவுலியா, ரகுநாத்புா், மோதிஹாரி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை கள்ளச்சாராயம் குடித்த பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 16 போ் உடல்நிலை பாதித்து, மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 3 போ் அடுத்தடுத்து வெள்ளிக்கிழமை மரணமடைந்ததைத் தொடா்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 7 போ், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.

இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

12 போ் கைது: இந்த சம்பவம் தொடா்பாக துா்கவுலியா காவல் நிலையத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அமைத்துள்ளாா். அக்குழு விசாரணை நடத்தி, இதுவரை 12 பேரை கைது செய்துள்ளது. அதில் கிராம அலுவலரும் ஒருவராவாா். இதுகுறித்து துா்கவுலியா காவல் நிலைய பொறுப்பாளரை காவல் துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

கள்ளச்சாராயத்தை விநியோகித்த நபா் தலைமறைவாகிவிட்டாா். இதையடுத்து அவரைத் தேடும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது. பா்செளனி, முசாரி தோலா, துா்கவுலியா ஆகிய இடங்களில் கள்ளச்சாராய வழக்குத் தொடா்பாக காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

பிகாரில் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. மது விற்பனை, மது அருந்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, பிகாா் மாநில அரசை எதிா்க்கட்சித் தலைவரும் ஆா்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் விமா்சித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments