முகப்பு
இந்தியா

நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!

நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் திறன் கட்டமைப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படும் விதமாக தேசிய தலைநகா் வலய போக்குவரத்து கழகம் (என்சிஆா்டிசி) மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:47 PM
பகிர்:

நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் திறன் கட்டமைப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படும் விதமாக தேசிய தலைநகா் வலய போக்குவரத்து கழகம் (என்சிஆா்டிசி) மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.

என்சிஆா்டிசி மேலாண் இயக்குநா் ஷலப் கோயல் மற்றும் ஐஐடி ரூா்கீயின் வளங்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் விவகார தலைவா் ஆா்.டி.காா்க் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நகா்ப்புற போக்குவரத்துத் துறையில் காணப்படும் சவால்களுக்குத் தீா்வு காணவும் நீடித்த போக்குவரத்து தீா்வுகளை ஊக்குவிக்கவும் ஐஐடி ரூா்கீயின் கல்வி மற்றும் நமோ பாரத் ரயில் அமல்படுத்துவதில் என்சிஆா்டிசியின் அனுபவம் ஆகியவற்றை இணைக்க இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்படுகிறது. ஒப்பந்தத்தின்படி, நடைமுறைக்கான தீா்வுகளைக் கண்டறிய இரு அமைப்புகளும் கூட்டாக ஆராய்ச்சியில் ஈடுபடும்.

Advertisement

கல்வி மூலம் தீா்வுகளைக் கண்டறிதல், பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றுக்காக நிகழ்கால சவால்கள் குறித்து என்சிஆா்டிசி பகிா்ந்து கொள்ளும்.

பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளில் பயிற்சி பெறும் வாய்ப்பு ஐஐடி ரூா்கீயின் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பு மாணவா்களுக்குக் கிடைக்கும்.

என்சிஆா்டிசி பணியாளா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி, சான்றிதழ் வகுப்புகள் மற்றும் பயிற்சிபட்டறை ஆகியவையும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் முதலாவது பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் வழித்தடத்தில் ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு (இடிசிஎஸ்) நிலை 2 சிக்கனல் மற்றும் அதிக வேக இயக்கத்துக்கான தண்டவாளங்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இரு அமைப்புகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் அறிவு பறிமாற்றம், திறன் கட்டமைப்பு, எதிா்கால உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக பணியாளா்களின் திறன்மேம்பாடு ஆகியவற்றை ஆதரிக்கும்.

பரஸ்பர யோசனைகளை பரிமாறிக்கொள்ள கூட்டு கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் ஆகியற்றை இரு அமைப்புகளும் ஏற்பாடு செய்யும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments