அந்த தனி நபரின் விருப்பம்! - பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிகளுக்கு அண்ணா ஹசாரே ஆதரவு!
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆதரவு தெரிவித்துள்ளார்...
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் 7 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகித்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 பேர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 25) அன்று மாலை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்பிகளின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியில் சேர வேண்டுமென்பது தனிநபரின் விருப்பம். அவர்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகினார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் ஏதேனும் பிரச்னைகளைச் சந்தித்திருக்கலாம் அல்லது கட்சி முறையாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் வெளியேறி இருக்கமாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய அரசியலமைப்பின்படி ஒரு கட்சியின் மூன்றில் இருபங்கு எம்பிக்கள் மற்றொரு கட்சியில் இணைந்து தங்கள் பதவியில் தொடர முடியும் என ராகவ் சத்தா கூறியது குறிப்பிடத்தக்கது.
Anna Hazare has expressed support for the seven Rajya Sabha members of the Aam Aadmi Party who joined the BJP.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.