முகப்பு
இந்தியா

திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

திரிணமூல் கோட்டையில் நடைபெறும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:57 PM
மேற்கு வங்க தேர்தல் - ANI
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தின் 142 தொகுதிகளுக்கு ஏப். 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்கான பிரசாரங்கள் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முக்கியத்துவம் பெறுவது ஏன் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர தீவிரம் காட்டிவரும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கடும் முயற்சிகளை செய்து வருகிறது. கிட்டத்தட்ட மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு இந்த தேர்தல் செய் அல்லது செத்துமடி என்பது போலத்தான்.

மொத்தம், 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப். 23-ஆம் தேதி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது.

Advertisement

இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.