உருவ பொம்மையை எரிப்பு! தீக்காயமடைந்த பாஜக எம்எல்ஏவை நலம் விசாரித்த அகிலேஷ் யாதவ்!
உருவ பொம்மை எரிப்பின்போது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்தவரை அகிலேஷ் யாதவ் நலம் விசாரித்தார்.
உருவ பொம்மை எரிப்பில் காயமடைந்த பாஜக எம்எல்ஏ அனுபமா ஜெய்ஸ்வாலை நேரில் சந்தித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நலம் விசாரித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது தீக்காயமடைந்த பாஜக எம்எல்ஏ அனுபமா ஜெய்ஸ்வாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர், அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, "சமூகத்தில் மக்களிடையே தீ பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. சமூகத்தில் நல்லிணக்கத்தின் மழை பொழிய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
இதைத்தான் நமது நேர்மையான அரசியல் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அதனால்தான், பாஜக எம்எல்ஏவை சந்திக்கச் சென்றோம்.
Advertisement
Advertisement
அனுபமா ஜெய்ஸ்வால் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துள்ளோம். அரசியலுக்கான இடம் வேறு, மனித உறவுகளின் முக்கியத்துவம் வேறு.
நல்லெண்ணம் நிலைத்திருக்கட்டு, நல்லிணக்கம் நிலைத்திருக்கட்டும்" என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டதாக, காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் சமாஜவாதி கட்சியின் அகிலேஷ் யாதவுக்கு எதிராக பாஜக பெண் எம்எல்ஏ-க்கள் உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச்சில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது, தலைமை தாங்கிய பாஜக எம்எல்ஏ அனுபமா ஜெய்ஸ்வாலின் மீது தீப்பொறி விழுந்ததில் அவரது முகம் மற்றும் தலையில் தீக்காயம் ஏற்பட்டது.
Samajwadi Party Chief Akhilesh Yadav Visits BJP MLA Anupama Jaiswal Injured While Burning His Effigy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.