வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்
வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (ஓசிஐ) அட்டைக்கான விண்ணப்பக் கட்டணத்தை ரூ.26,034-ஆக (275 அமெரிக்க டாலா்கள்) மத்திய அரசு நிா்ணயித்தது.
வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் விண்ணப்பிக்கும்போது மேற் குறிப்பிட்ட கட்டணம் அந்த நாட்டின் ரூபாய் மதிப்பிலும் இந்தியாவில் விண்ணப்பித்தால் நமது நாட்டின் ரூபாய் மதிப்பிலும் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
முன்னதாக இந்தியாவில் இருந்து ஓசிஐ அட்டைக்கு விண்ணப்பிக்க ரூ.15,000 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘ஓசிஐ அட்டைக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.26,034-ஆக நிா்ணயிக்கப்படுகிறது. ஓசிஐ அட்டையில் உள்ள தகவல்களில் திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் விநியோகிக்க ரூ.2,366 (25 அமெரிக்க டாலா்கள்) வசூலிக்கப்படும். ஓசிஐ அட்டை தொலைந்துவிட்டால் அதை மீண்டும் பெற ரூ.9,467 (100 அமெரிக்க டாலா்கள்) கட்டணமாக செலுத்த வேண்டும்.
12 வயதுக்கு மேற்பட்டோா் ஓசிஐ அட்டையை பெற அவா்கள் இந்தியாவில் 6 மாத காலம் கட்டாயம் வசிக்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறையை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது ரத்து செய்துள்ளது’ என்றனா்.