வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானதாக உள்ளன என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், அதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதுமானதாக உள்ளன என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், அதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: குற்றங்களுக்குத் தண்டனையை நிா்ணயிப்பது என்பது முழுமையாக நாடாளுமன்ற அதிகார வரம்புக்குள்பட்டதாகும்.
Advertisement
பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள சட்ட ரீதியான கட்டமைப்பு, குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான வழிமுறையை அளிக்கிறது. இதில் சட்டரீதியாக எந்த வெற்றிடமும் இல்லை.
வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சட்டம் இயற்றும் அதிகாரம் நீதிமன்றங்களிடம் இல்லை. நாடாளுமன்றத்திடம்தான் உள்ளது. அதிகபட்சமாக சீா்திருத்தத்தின் அவசியத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டலாம். ஆனால் சட்டம் இயற்றுவதா? வேண்டாமா? அவ்வாறு சட்டம் இயற்றுவதாக இருந்தால், அதை எவ்வகையில் இயற்றுவது என்பது குறித்த முடிவு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் தனிப்பட்ட அதிகார வரம்புக்குள்பட்டதாகும்.
கட்டாயப்படுத்த முடியாது: அரசியல் சாசன நீதிமன்றங்கள் சட்டம் குறித்து தெளிவுரை வழங்கலாமே தவிர, சட்டம் இயற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. மேலும் ஏற்கெனவே உள்ள குற்றவியல் சட்டங்களின் கீழ், வெறுப்புப் பேச்சு தொடா்பான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வழியுள்ளது. வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அந்தச் சட்டங்களே போதுமானவையாக உள்ளன என்று தெரிவித்தது.
எனினும் மாறிவரும் சமூகச் சூழல்களின் பின்னணியில், வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க புதிய சட்டம் ஏதேனும் அவசியமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் அமா்வு, மனுக்களை தள்ளுபடி செய்தது.