காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!
காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பது பற்றி..
ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்கிறார்.
ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாவட்ட மற்றும் நகர்ப்புற காங்கிரஸ் தலைவர்களுக்காக இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாள் அமைப்பு ரீதியான பயிற்சி முகாமின் நிறைவு நாளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் அமர்வுகளில் பங்கேற்பார் என்றும், கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
வரவிருக்கும் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக, அமைப்பு ரீதியான பிரச்னைகள் குறித்துக் கருத்துக்களைக் கேட்பார். குறிப்பாக, வாக்குச்சாவடி நிலையில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்தி, அமைப்பு ரீதியான செயல்திறன் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்வார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
ஹிமாசல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ராகுல் காந்தியை வரவேற்றதோடு, இந்தப் பயிற்சி முகாமை அமைப்பு ரீதியாக வலுப்பெறுவதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் ஒரு முக்கியத் தளம் என்றும் விவரித்தார். ராகுல் காந்தியின் பங்கேற்பு, கட்சித் தொண்டர்களுக்கு வழிகாட்டுதலையும் புது உத்வேகத்தையும் வழங்கும்.
கட்சி வட்டாரங்களின்படி, கட்சியின் அமைப்பு கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், ஊடக உத்தி, சமூக ஊடகங்களின் திறமையான பயன்பாடு, அடிமட்ட மக்களைச் சென்றடைதல் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றிலும் இந்த அமர்வுகள் கவனம் செலுத்தும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது.
Congress leader Rahul Gandhi on Thursday will attend a training programme for district and party presidents, and seek feedback on organisational issues during his day-long visit to Himachal Pradesh's Kangra district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.