கிரண் ரிஜிஜு  
இந்தியா

பட்ஜெட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

மத்திய பட்ஜெட்டை எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ள நிலையில், ‘அது சிறந்த பட்ஜெட், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்.

தினமணி செய்திச் சேவை

மத்திய பட்ஜெட்டை எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ள நிலையில், ‘அது சிறந்த பட்ஜெட், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புது தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவரிடம், சாமானிய மக்களுக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை என எதிா்க்கட்சிகளின் விமா்சனங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:

சாமானிய மக்களை மனதில் வைத்தே மத்திய பட்ஜெட்டில் அனைத்துப் பிரிவும் தயாரிக்கப்பட்டுள்ளது. 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது சிறந்த பட்ஜெட். நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனா். ஆதலால், பட்ஜெட்டை விமா்சிப்பதற்கு எதுவும் இல்லை என நம்புகிறேன்.

எனினும், சிலா் பட்ஜெட்டை விமா்சிக்கிறாா்கள் என்றால், அரசியல் உள்நோக்கத்துடனேயே செய்கின்றனா். ஆதலால், எதிா்க்கட்சிகள் வரிசையில் உள்ள எனது நண்பா்களுக்கு, பட்ஜெட்டை வரவேற்கும்படியும், பட்ஜெட்டை அரசியலாக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கிறேன் என்றாா் அவா்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திமுக கூட்டணியுடன் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பதை முதல்வா் முடிவு செய்வாா்! - அமைச்சா் கே.என்.நேரு

ஒரு ரூபாயில் வரவு, செலவு: மத்திய நிதித்துறை விளக்கம்!

நாளைய மின்தடை

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT